தெஹ்ரான், 13 மார்ச் (பெர்னாமா) -- ஈரானில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உயர் மட்ட தலைவரைக் கொல்லப் போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நேற்று மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து நடத்திய இராணுவ தாக்குதலைப் பாதுகாக்க போர் தொடங்கியதில் இருந்து தாம் வழங்கிய முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் அம்மிரட்டலை விடுத்துள்ளார்.
சுமார் இரண்டு வாரங்களாக அமெரிக்கா-இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, தெஹ்ரானின் உயர்மட்ட புரட்சிகர இராணுவப் படை மற்றும் பாசிஜ் துணை இராணுவப் படையின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், ஈரான் ''இனி முன்பு போல இருக்காது'' என்று நெதன்யாஹு கூறினார்.
போரின் தொடக்கத்தில் ஈரானின் உயர் மட்ட தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பழிவாங்கும் முயற்சியாக மார்ச் 2-ஆம் தேதி ஈரானின் ஆதரவு குழு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நெதன்யாஹு தெரிவித்தார்.
மேலும், லெபனானின் ஹெஸ்போல்லா நகரைத் தாக்கப் போவதாகவும் அவர் சபதம் விடுத்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்புடன் தாம் தினமும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அவர்களின் உரையாடல் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இருப்பதாகவும் நெதன்யாஹு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)