Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஹோர்முஸ் நீரிணை வழியான வணிகக் கப்பல் போக்குவரத்து 90% சரிந்துள்ளது

19/03/2026 06:43 PM

ஈரான், 19 மார்ச் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியான வணிகக் கப்பல் போக்குவரத்து 90 விழுக்காடு சரிந்துள்ளது.

இதனால், உலகளாவிய கடல்வழி வர்த்தகம், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தெற்கே உள்ள, கேப் தீபகற்பத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், எரிசக்தி மற்றும் எண்ணெய்க்கான முக்கிய நீர்வழியை தெஹ்ரான் மூடியது.

அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம், யு.கே.எம்.டி.ஓ சம்பந்தப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை பாதுகாப்பு அபாய அளவை மிகவும் அபாயகரமானதாக உயர்த்தியது.

இதன் காரணமாக, காப்பீட்டு நிறுவனங்கள் அப்பகுதியில் உள்ள கப்பல்களுக்கான போர்க் காப்பீட்டுக் கொள்கைகளை உடனடியாக ரத்து செய்தன.

கடந்த மார்ச் 3ஆம் தேதி நான்கு கப்பல்கள் மட்டுமே அந்த நீர்வழிப்பாதையைக் கடந்து சென்ற வேளையில், இது முந்தைய சராசரி ஏழு நாள்களுடன் ஒப்பிடுகையில் 90 விழுக்காடு குறைவாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)