Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பெட்ரோலைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

19/03/2026 03:21 PM

ஜித்ரா, 19 மார்ச் (பெர்னாமா) --  கெடா, புக்கிட் காயு ஹித்தாமில் உள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS-இல் ஐந்து சிறிய சரக்கு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் போலீசார் நேற்றிரவு 2,000 லீட்டர் பெட்ரோலைக் கடத்தும் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.

காலை மணி 7 அளவில், குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் இப்பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.

"நாங்கள் 5 நான்கு சக்கர வாகனங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினோம். 5 ஓட்டுநர்கள். அதாவது 4 வெளிநாட்டு ஆடவர்கள் மற்றும் 23 முதல் 37 வயதுக்குட்பட்ட ஓர் உள்நாட்டு ஆடவர். பறிசோதனையின் மூலம் அனைத்து வாகனங்களிலும் கூடுதல் பாகங்கள் அல்லது ஒவ்வொன்றிலும் சுமார் 400 லீட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட கூடுதல் தொட்டிகள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது", என்றார் அவர்.

இன்று, குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநருடன் இணைந்து நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், டத்தோ அட்ஸ்லி அபு ஷா அதனை கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)