பாக்தாத், 19 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நோன்பு பெருநாளைக் கொண்டாடத் தயாரான ஈராக் மக்கள் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தைகளில் கூடினர்.
பெருநாளுக்கு முன்னதாக உணவு, இனிப்புகள், பயிர்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் சுக் அல் ஷொர்ஜா சந்தைக்கு வருகைப் புரிந்திருந்தனர்.
நோன்புப் பெருநாள், ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் வேளையில், குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் நண்பர்களின் வருகைக்காக ஏற்பாடுகளைச் செய்ய பொருளாதார நெருக்கடி குடும்பங்களுக்கு ஒருவித அழுத்தத்தையும் கொடுக்கிறது.
விலை உயர்வுகளை எதிர்கொண்ட போதிலும், ஈராக்கியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடத் தங்களால் இயன்றவரை தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரான்-ஈராக் போர் மோதலில் இரு தரப்புத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் ஒரே நாடாக ஈராக் தற்போது சிக்கியுள்ளது.
இதனால், இவ்வளவு காலமாக வட்டார அமைதியின்மையைத் தவிர்த்து வந்த அந்நாடு, ஒரு பெரும் நெருக்கடியில் வீழ்வதற்கான அபாயம் அதிகரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)