புக்கிட் பிந்தாங், 23 மார்ச் (பெர்னாமா) -- நேற்றிரவு, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாடிக் கட்டிடம் கொண்ட தளவாடக் கடை ஒன்று தீக்கிரையானது.
தீச்சம்பவம் குறித்து இரவு 10.58 மணிக்கு தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஜே.பி.பி.எம்-மின் செயல்பாட்டு மையம், பி.ஜி.ஓ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஜாலான் ஹங் துவா மற்றும் ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தின் உதவியுடன் புடு தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, ஜே.பி.பி.எம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தளவாடப் பொருள்கள் மற்றும் வாசனை திரவியம் ஆகியவற்றை விற்பனை செய்து வந்த அக்கட்டிடத்தின் தரை மற்றும் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 70 விழுக்காடு சேதமடைந்ததாக, ஜே.பி.பி.எம் கூறியது.
அதோடு, தீச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் பதிவுச் செய்யப்படாத நிலையில், சம்பவத்திற்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)