Ad Banner
Ad Banner
 உலகம்

ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தக் கப்பல்கள் அஞ்சுகின்றன - ஈரான் விளக்கம்

23/03/2026 04:44 PM

ஈரான், 23 மார்ச் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டிருந்தாலும், தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து, கப்பல்கள் அந்தப் பாதை வழியாகச் செல்ல அஞ்சுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்திருக்கிறார்

காப்புறுதி நிறுவனங்களால் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களினால் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சரக்கு கப்பல்கள் தயங்குவதாக அப்பாஸ் அராக்ச்சி விளக்கம் அளித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்படவில்லை என்றாலும், ஈரானுக்கு ஒத்துழைக்காத தரப்பினரின் கப்பல்கள் இயல்பான பயணத்தை மேற்கொள்ள தம்மால் உறுதி அளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து, நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு கோடி பீப்பாய்களையும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஏறத்தாழ 20 விழுக்காட்டையும் கையாளும் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை, ஈரான் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை தெஹ்ரான் முழுமையாக மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)