காமில்லா, 23 மார்ச் (பெர்னாமா) -- வங்காளதேசத்தின் காமில்லா எனும் நகரில், இரயில் பாதையை கடக்க முயன்ற பேருந்து மீது இரயில் மோதியதில், 12 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் உள்நாட்டு நேரப்படி, அதிகாலை மணி 2.45-க்கு இவ்விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.
இந்த விபத்தில் பேருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
விபத்து நிகழ்ந்த போது அவ்விடத்தில் காவலர்கள் யாரும் பணிக்கு அமர்த்தப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இக்கோர விபத்தினால், ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில், இரு குழந்தைகளும் மூன்று பெண்களும் அடங்குவர்.
காயமடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)