Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா

24/03/2026 04:05 PM

மாரான், 24 மார்ச் (பெர்னாமா) -- பகாங், மாரான், ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கான கொடியேற்ற வைபவம், பக்தர்கள் புடைச்சூழ நேற்று காலை மணி எட்டுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர், 108 சங்காபிஷேகங்களுடன் அவ்விழா மேலும் கலைக்கட்டியது.  

இந்நிலையில், மார்ச் 31-ஆம் தேதி இரவு தொடங்கி ஏப்ரல் முதலாம் தேதியில் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

மரத்தாண்டவருக்கான மஷா அபிஷேகம் அத்திருவிழாவின் முத்தாய்ப்பு அங்கங்களில் ஒன்றாக அமையும். 

அதுமட்டுமின்றி, இத்திருவிழாவில் காவடிச் சுமந்து காணிக்கை செலுத்தவிருக்கும் மக்கள் மார்ச் 31-ஆம் தேதி மாலை மணி ஐந்துக்கு மாரான், Kampung Jara-வில் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.   

இந்நிலையில், பக்தர்களுக்கான தங்கும் வசதி உட்பட மூன்று வேளை அன்னதானமும் வழங்கப்படவிருப்பதாக கூறிய ஆலய நிர்வாகம், அதிகமான தங்க ஆபரணங்களை அணிந்து வர வேண்டாமெனவும் வலியுறுத்தியது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]