Ad Banner
Ad Banner
 பொது

கர்ப்பிணி மனைவிக்கு காயத்தை ஏற்படுத்திய நபருக்கு நான்கு மாத சிறை

26/03/2026 06:48 PM

மலாக்கா, 26 மார்ச் (பெர்னாமா) --  இரண்டு வாரங்களுக்கு முன்பு, தமது கர்ப்பிணி மனைவிக்கு காயத்தை ஏற்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்கு, அயேர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்தது.

முஹ்மட் ஐடில் அசஹார் ரஹ்மாட் மீது இந்தத் தண்டனையை விதித்ததோடு, கைது செய்யப்பட்ட மார்ச் 19ஆம் தேதியிலிருந்து இரு தண்டனைகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட வேண்டும் என மாஜிஸ்திரேட் நூர் அஃபிகா ரட்ஹியா சைனூரின் உத்தரவிட்டார்.

முதல் குற்றச்சாட்டின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் தமது மனைவி நூர் அசிமா அப்துல் ரசாக்கின் தலையின் பின்புறத்தில் தாக்கி, வேண்டுமென்றே அவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அறைந்தது, அவரின் தலையில் அடித்தது மற்றும் அவர் கீழே விழும் வரை தள்ளியது ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.

மார்ச் 15ஆம் தேதி, மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள கோத்தா ஷாபண்டார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கேளிக்கை மையம் ஒன்றில் அவர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)