Ad Banner
Ad Banner
 பொது

முன்னாள் தலைவர்கள் மீண்டும் அம்னோவில் இணைவது குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

28/03/2026 05:29 PM

கோத்தா திங்கி, 28 மார்ச் (பெர்னாமா) --  செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் உசேன் மற்றும் கைரி ஜமாலுடின் உள்ளிட்ட அம்னோவைச் சேர்ந்த சில முன்னாள் தலைவர்கள் மீண்டும் அக்கட்சியில் இணைவதற்கான விண்ணப்பங்கள் குறித்து வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

“Rumah Bangsa” என்ற உணர்வின் அடிப்படையில் அவ்விவாதம் நடைபெறும் என்று கூறிய அம்னோ உதவித் தலைவரான டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின், விண்ணப்பத்திற்கான முடிவுகள் அக்கூட்டத்தில் அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

''நான் அதைக் கொண்டு வருவேன், என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் ரூமா பங்சா என்ற உணர்வின் அடிப்படையிலும், நமது நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் சிந்தனையை உட்படுத்தியும் கட்சித் தலைவரின் அறிக்கைகளின்படியும், நாங்கள் இதை ஒரு நேர்மறையான விஷயமாகப் பார்க்கிறோம். நிச்சயமாக நல்ல முடிவுகள் எடுக்கப்படும்'', என்றார் அவர்.

கட்சியின் மீண்டும் இணைந்து கொள்வது குறித்து தமது தரப்பு இன்னும் விண்ணப்பங்களைச் சேகரித்து வருவதாகவும், அம்னோவில் மீண்டும் இணைய விரும்பும் முன்னாள் தலைவர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் முஹமட் காலிட் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)