Ad Banner
Ad Banner
 பொது

ரொம்பின் செம்பனைத் தோட்டத்தில் தீ; 60 ஹேக்டர் தீ அணைக்கப்பட்டுள்ளது

29/03/2026 04:51 PM

ரொம்பின் , மார்ச் 29 (பெர்னாமா) -- பகாங், ரொம்பினில் உள்ள செம்பனைத் தோட்டத்தில், 300 ஹேக்டர் நிலத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் நேற்று மாலை மணி ஐந்து  நிலவரப்படி 60 ஹேக்டர் அளவிலான தீ அணைக்கப்பட்டுள்ளது.

தீப் பரவலை அணைக்கும் செயல்முறையைத் துரிதப்படுத்தவும், தீயைக் கட்டுப்படுத்தவும் 68,000 லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், நீரை விரைந்து பாய்ச்சும் முறையும் செயல்படுத்தப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மற்றும் மீட்புப் பிரிவின் உதவி இயக்குநர் முஹமட் சலாஹுடின் இசா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அப்பகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட வேளையில், இன்று ஏ மற்றும் சி பிரிவுகளில் உள்ள தீயை அணைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது

பி மற்றும் டி பிரிவுகள் இதுவரை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்குள் அத்தோட்டத்தில் பரவியுள்ள தீ முழுமையாக அணைக்கப்படும் என்று தமது தரப்பு எதிர்ப்பார்ப்பதாக முஹமட் சலாஹுடின் இசா   கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)