Ad Banner
Ad Banner
 உலகம்

பாகிஸ்தானில் கனமழை; 17 பேர் பலி

31/03/2026 03:10 PM

கைபர் பக்துன்வா, 31 மார்ச் (பெர்னாமா) --  பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பெய்த கனமழையில் 14 குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 25 பேர் காயமடைந்ததாக அந்த மாகாணத்தின் பேரிடர் நிர்வகிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மழையினால் வீடுகளின் கூரைகளும் சுவர்களும் இடிந்து விழுந்தன.

கடந்த ஐந்து நாள்களாக பாகிஸ்தானும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானும் கனமழையைச் சந்தித்து வந்த நிலையில், அது கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி கட்டிடங்கள் இடிந்து விழக் காரணமாக அமைந்தது.

இதனால், அவ்விரு நாடுகளிலும் 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான உயிரிழப்புகள், பர்வான், மைடான் வார்டக், டெய்குண்டி மற்றும் லொகர் உள்ளிட்ட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகியுள்ளன.

அங்கு பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக தேசிய பேரிடர் நிர்வகிப்பு ஆணையம், NDMA தெரிவித்துள்ளது.

தீவிர வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)