கோலாலம்பூர், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு, தேசிய பெட்ரோலிய நிறுவனம், பெட்ரோனாசுக்கு வழக்கத்துக்கு மாறான இலாபத்தை அளிக்கு என்று அர்த்தமாகாது.
அந்த எரிசக்தி விற்பனையின் மொத்த மதிப்பு சங்கிலி தொடர்ச்சியில் பல்வேறு நிலைகளில் செலவு உயர்ந்திருப்பது இதற்கு காரணமாகும் என பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைவரும் அக்குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஶ்ரீ தெங்கு முஹமட் தௌஃபிக் தெங்கு அசிஸ் தெரிவித்தார்.
''மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு உற்பத்தியாளர் என்ற வகையில் ஒரு பீப்பாய் 120 டாலர் விலையில் அவர்கள் லாபம் ஈட்டுவதாக மக்கள் கூறலாம். ஆனால், பெட்ரோனாசின் முதலீடும் ஈடுபாடும் மேல்நோக்கில் மட்டும் இல்லை. பெட்ரோனாசின் முதலீடும் ஈடுபாடும் மதிப்புச் சங்கிலி முழுவதும், அதாவது இடைநிலை மற்றும் இறுதிநிலைப் பிரிவுகளில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில்தான் எண்ணெய் விலையும் உயர்கின்றது. உள்ளீட்டுச் செலவுகளும் அல்லது மூலப்பொருள் கொள்முதல் செலவுகளும் அதிகரிக்கின்றன,'' என்றார் அவர்.
அதிகரித்து வரும் செலவுகளை முழுமையாகக் கருத்தில் கொள்வதோடு, அக்குழுமத்தின் நிதி அடைவுநிலை மீதான எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை ஈடுசெய்யும் என்றும் தெங்கு முஹமட் மேலும் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)