Ad Banner
 விளையாட்டு

ஐரோப்பிய வெற்றியாளர் லீக்; பி.எஸ்.ஜி வெற்றி

09/04/2026 04:38 PM

ஐரோப்பா, ஏப்ரல் 09 (பெர்னாமா) -- ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டி.

இன்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்று காலிறுதி ஆட்டத்தில், நடப்பு வெற்றியாளரான பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் பி.எஸ்.ஜி, லிவர்பூல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இருப்பினும்,  இரண்டாம் சுற்று  காலிறுதி ஆட்டம் ஏப்ரல் 15-ஆம் தேதி  லிவர்பூல் அணியின் சொந்த அரங்கில் நடைபெறவிருப்பதால் இந்த வெற்றி பி.எஸ்.ஜி அணிக்கு மனநிறைவை அளிக்கவில்லை.

ஆட்டம்  தொடங்கிய 11-வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து பி.எஸ்.ஜி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஆட்டத்தை சமன் செய்ய லிவர்பூல் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் முதல் பாதி ஆட்டம் 1-0 என்று நிறைவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து பி.எஸ்.ஜி தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது.

மற்றொரு முதல் சுற்று காலிறுதி ஆட்டத்தில், பார்சிலோனாவும் அட்லெடிக்கோ மெட்ரிட்டும் மோதின.

இந்த ஆட்டத்தில் 45 மற்றும் 70-வது நிமிடங்களில் அடிக்கப்பட்ட கோல்களினால் 0-2 என்ற நிலையில் பார்சிலோனா தோல்வி கண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)