ஜோகூர், 12 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை, ஜோகூர் மெர்சிங்கில் உள்ள பேரங்காடி முன்புறத்தில் பெண் ஒருவரை குத்தி பலத்த காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்டவர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, நேற்று பின்னிரவு மணி 12.15-க்கு 47 வயதான அச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக, மெர்சிங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டி.எஸ்.பி முஹமட் நிசாம் யூசோப் கூறினார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 48 வயது பெண்ணுக்கு நெற்றியில் காயங்களும், மூக்கில் எலும்பு முறிவும் ஏற்பட்டதாக, டி.எஸ்.பி முஹமட் நிசாம் யூசோப் தெரிவித்தார்.
இதனிடையே, சந்தேக நபர் மீது சீறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் Methamphetamine வகை போதைப்பொருளை உட்கொண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்ஷன் 117-இன் கீழ் நேற்று தொடங்கி நான்கு நாள்களுக்கு அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆயுதமின்றி வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் செக்ஷன் 325 மற்றும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 15(1)(a)-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)