Ad Banner
Ad Banner
 உலகம்

பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

12/04/2026 05:38 PM

மும்பை, ஏப்ரல் 12 (பெர்னாமா) -- தமிழ் உட்பட இந்திய திரையுலகில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் மூத்த பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார்.

அவருக்கு வயது 92.

சனிக்கிழமை ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து மும்பையில் உள்ள Breach Candy மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதே வேளையில், நுரையீரல் நோய் மற்றும் முதுமையின் காரணமாக இதர உடல்நலக் குறைபாடுகளுடனும் அவர் போராடி வந்தார்.

இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

1933-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்த ஆஷா போஸ்லே, தமது 10-வது வயதில், அதாவது 1943-ஆம் ஆண்டில் பாடத் தொடங்கினார்.

தமது 90-வது வயதிலும் தொடர்ந்து பாடி வந்த ஆஷா போஸ்லே, இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் உட்பட பிரபல ஹிந்தி திரை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

20 மொழிகளில் பாடியுள்ள இவர் தாதாசாகேப் பால்கே, பத்மவிபூஷண் விருதுகளையும், இரண்டு முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

நாளை மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)