கோலா திரெங்கானு, 13 ஏப்ரல் (பெர்னாமா) -- பிலிப்பைன்சுக்கு டீசல் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் முற்றிலும் உண்மையற்றது என்பதால் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்நிய மூலப்பொருள் வர்த்தக நிறுவனமான VITOL-லே அந்நாட்டிற்கு எரிபொருள் விநியோகிப்பதாகவும், பெட்ரோலியம் நேஷனல் நிறுவனம், பெட்ரோனாஸ் அல்ல என்றும் அவர் கூறினார்.
''பிலிப்பைன்சுக்கு விற்பனை செய்வதற்காக எண்ணெயைக் கொண்டுவர அவர்களுக்கு (VITOL) ஓர் ஒப்பந்தம் உள்ளது. பிலிப்பைன்சுக்கு (விநியோகம்) செய்வது நாங்கள் (பெட்ரோனாஸ்) அல்ல. ஆனால், நாங்கள் தடுக்கவில்லை. நாங்கள் வழிவிடுகிறோம். வெளிநாட்டு ஒப்பந்தங்களில் உள்ள மக்களுக்கு அந்த எண்ணெய் சொந்தமானது. இந்த சர்ச்சையை நிறுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும், தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழலில் நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்'', என்றார் அவர்.
இன்று, திங்கட்கிழமை திரெங்கானு Imtiyaz அறவாறிய இடைநிலைப் பள்ளியில், திரெங்கானு Tahfiz சமயப்பள்ளி மாணவர்களுடனான் மடானி சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
மலேசியாவிலிருந்து பிலிப்பைன்சுகு டீசல் விநியோகம் செய்யப்படுவதாக வெளியான செய்தியில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று பெட்ரோனாஸ் மறுத்துள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)