Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சி

14/04/2026 02:33 PM

இஸ்லாமாபாத், 14 ஏப்ரல் (பெர்னாமா) --  வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைவதற்குள் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அதேவேளை, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் இன்னும் சாத்தியமுள்ளதாக வாஷிங்டனும் தெஹ்ரானும் அறிவிப்புக்குறியைக் காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

நாங்கள் முழுமையாக முடங்கிவிடவில்லை, கதவு இன்னும் மூடப்படவில்லை. இரு தரப்பினரும் பேரம் பேசுகிறார்கள். இது ஒரு சந்தை என்று வட்டாரம் ஒன்று அமெரிக்க இணைய ஊடகமான Axios-சிடம் தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்கள், பாகிஸ்தானில் உள்ள தங்கள் சகாக்களுடன் தனித்தனியாக தொலைப்பேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் இருவரும், வெள்ளை மாளிகை தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செயிட் அப்பாஸ் அராக்சி ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா–ஈரான் போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் நீடித்த அமைதிக்காக பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்யும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)