ஈரான், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- அனைத்துலக போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்வழிகளை மறிப்பதற்கு எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை.
ஹோர்முஸ் நீரிணையின் மீது வாஷிங்டன் விதிக்கக்கூடிய கட்டுப்பாடுகள், அனைத்துலக சட்டத்தை மீறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் அனைத்துலக கடல்சார் அமைப்பு, ஐ.எம்.ஓ பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் கூறியிருக்கின்றார்.
"தற்போது நெருக்கடியின் காரணமாக, மோதல் காரணமாக இந்த வழித்தடங்களில் கப்பல்கள் பயணிப்பது பாதுகாப்பானது அல்ல. இதுதான் உண்மையில் தடுக்கிறது. ஆனால் சட்டப்படி பேச வேண்டும் என்றால், அனைத்துலக சட்டத்தின்படி. குற்றமற்ற பயண உரிமை அல்லது அனைத்துலக போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்துலக நீரிணைகள் வழியாக சுதந்திரமாக பயணம் செய்வதைத் தடைச் செய்ய எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை", என்றார் அவர்.
ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கான உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் நுழையும் அல்லது வெளியேற முயற்சிக்கும் கப்பல்களை அமெரிக்காவின் கடற்படை வழிமறைக்க தொடங்கும் என்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டவட்டமாக கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)