ஹட்யாய், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த சில மாதங்களில் ஹட்யாய் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் வணிக வளாகங்கள் நீரில் மூழ்கி, மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 13 தொடங்கி 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படும் சொங்கிரான் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் நகரம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது.
சமயம் மற்றும் கலாச்சார அம்சங்களை முன்னிலைப்படும் இவ்விழா, உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்க்கும் ஒரு முக்கிய சுற்றுலா நிகழ்ச்சியாகவும் மாறியுள்ளது.
பல மாதங்களாக வறட்சி நிலையில் காணப்பட்ட வீதிகள் தற்போது ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளால் அப்பகுதி நிறைந்திருக்கிறது.
முன்னதாக மக்களின் அன்றாட நடவடிக்கையைப் பாதித்த வெள்ளத்திற்குப் பிறகு, தற்போது நகரம் முழுவதும் மக்கள் நீர் பாய்ச்சி, இசையுடன் சிரித்து மகிழும் காட்சிகள் பெரும் மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.
அதே வேளையில், சொங்கிரான் கொண்டாட்டம் சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்ய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இக்கொண்டாட்டம் தாய்லாந்து கலாச்சாரத்தின் அம்சங்களைப் பிரதிபலிப்பது மட்டுமின்றி பேரழிவிற்குப் பிறகு அந்நகரம் மீண்டும் சுற்றுலாத் தலமாக மீண்டு வருவதைக் காட்டுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)