ரெம்பாவ், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணையை மறிக்கும் தனது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி, அமெரிக்காவை மலேசியா வலியுறுத்தியுள்ளது.
ஏனெனில், அது எரிசக்தி விநியோகத்தையும் உலகப் பொருளாதார நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என்றும் வெளியுறவு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் நினைவுறுத்தினார்.
அமெரிக்காவின் அத்தகைய நடவடிக்கை, வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள் ஹோர்முஸ் நீரிணையில் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கக்கூடும்.
மேலும், அதனால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முஹமட் ஹசான் கூறினார்.
''எனவே, அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக, இந்த நடவடிக்கையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எந்தப் பயனும் இல்லாத இந்தப் போருக்காக உலகைப் பணயக்கைதியாக வைக்கக் கூடாது,'' என்றார் அவர்.
இன்று, நெகிரி செம்பிலான், ரெம்பாவில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் ஹசான் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)