Ad Banner
Ad Banner
 பொது

மாற்றன் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆடவருக்கு 30 ஆண்டுகள் சிறை & 18 பிரம்படி

14/04/2026 05:57 PM

பாசிர் மாஸ், ஏப்ரல் 14 (பெர்னாமா) -- தமது 13 வயது மாற்றான் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக, ஆடவர் ஒருவருக்கு பாசிர் மாஸ் செஷன்ஸ் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 18 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.

ஆறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 53 வயதான அந்த நபருக்கு நீதிபதி சுல்கிப்ளி அப்துல்லா அத்தண்டனையை விதித்தார்.

ஒவ்வோர் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்த நீதிமன்றம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி அந்த ஆடவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அனைத்து தண்டனைகளும் ஏக காலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

முதல் மூன்று குற்றச்சாட்டுகளின்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் 31, நவம்பர் 12 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் தானா மேராவில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு மணி 12 முதல் அதிகாலை மணி 4 வரை தமது வளர்ப்பு மகளுடன் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நான்காவது முதல் ஆறாவது குற்றச்சாட்டுகளின்படி, அவர் 2026-ஆம் ஆண்டு மார்ச் 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பின்னிரவு மணி 1-க்கு, அதே பாதிக்கப்பட்டவருடன் அதே போன்ற ஓர் இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிருபிக்கப்பட்டால், 10 ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 376B (1)-இன் கீழ் இவ்வவழக்கு விசாரிக்கப்பட்டது.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)