கெப்போங், ஏப்ரல் 14 (பெர்னாமா) -- சிலாங்கூர், கெப்போங்கில் உள்ள ஒரு மனமகிழ் மையத்தின் முன்புறத்தில் மதுபோதையில் இருந்த வாடிக்கையாளரின் செயலினால் ஏற்பட்ட கைகலப்பு என்று நம்பப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு 13 ஆடவர்களை போலீஸ் கைது செய்துள்ளது
18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஸ்ரி சகோனி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8 அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுபோதையில் இருந்த வாடிக்கையாளர் ஏற்படுத்திய பிரச்சனையினால் இரு தரப்பிற்கு இடையே நிகழ்ந்த கைக்கலப்பே இச்சம்பவத்திற்கு முக்கியக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அச்சந்தேக நபர்கள் அனைவரும் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகாக விசாரணை அறிக்கை துணை அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)