Ad Banner
Ad Banner
 உலகம்

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லேவின் உடல் தகனம்

14/04/2026 06:20 PM

மும்பை, ஏப்ரல் 14 (பெர்னாமா) -- இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக் கணக்கானப் பாடல்களைப் பாடி தமது தனித்துவக் குரலால் இரவாப் புகழ்ப்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

நேற்று முன் தினம் தமது 92-ஆவது வயதில் காலமானத்தைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு இந்தியா அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியது. 

மூத்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லேவின் நல்லுடல், இறுதிச் சடங்கிற்குப் பின்னர் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.  

அதற்கு முன்னதாக, அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர்கள், பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆஷாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் கூடினர்.

எண்ணற்ற Bollywood திரைப்படங்களில் தமது காந்தர்வக் குரலின் மூலம், பன்முகத் திறமையை வெளிப்படுத்திய ஆஷா போஸ்லேவிற்கு மாநில அளவில் பல்வேறு கௌரவங்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் தலைமுறைக் கடந்த இவர், உலக அளவிலும் பெரும் பாராட்டைப் பெற்றதோடு பிரிட்டனின் Boy George உள்ளிட்ட அனைத்துலகக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றினார்.

தனது நீண்டகால கலைப்பயணத்தில் இரண்டு கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆஷா போஸ்லே, இந்தியாவின் உயரிய கலை விருதான தாதா சாகேப் பால்கே விருதும், நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷனும் பெற்றுள்ளார்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)