Ad Banner
Ad Banner
 பொது

வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் கடந்தாண்டு குறைந்துள்ளது

15/04/2026 05:31 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 15 (பெர்னாமா) -- மலேசியாவில் 2024-ஆம் ஆண்டில் 93 கோடியே 34 லட்சம் ரிங்கிட்டாக பதிவு செய்யப்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் 2025-ஆம் ஆண்டில் 63 கோடியே 69 லட்சம் ரிங்கிட்டாக குறைந்துள்ளது.

மொத்த இழப்புகளில் பொதுச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்பட்ட இழப்புகளே மிக அதிகமாகும். 

அத்துறைகளில் கடந்த ஆண்டு 30 கோடியே 34 லட்சம் ரிங்கிட்டாக இருந்த இழப்புகளின் மதிப்பு இவ்வாண்டும் 38 கோடியே 2 லட்சம் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதை புள்ளிவிவரத்துறை தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் சுட்டிக்காட்டினார்.

குடியிருப்புச் சொத்துக்களுக்கான இழப்புகள் 18 கோடியே 38 லட்சம் ரிங்கிட்டாகவும், விவசாயத் துறையில் ஏற்பட்ட இழப்புகள் 5 கோடியே 26 லட்சம் ரிங்கிட்டாகவும் குறைந்துள்ள வேளையில், வணிக வளாகங்களில் ஒரு கோடியே 34 லட்சம் ரிங்கிட் இழப்பு பதிவாகியுள்ளது.

மலேசியாவில் வெள்ளத்தின் தாக்கம் குறித்த 2025 ஆம் ஆண்டுக்கான சிறப்பு அறிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், Datuk Seri Dr. Mohd Uzir இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 51.2 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் அவசரகால சூழ்நிலைகளில் வாழ்க்கையைத் தொடர்வதை உறுதிசெய்வதற்காக அன்றாடத் தேவைகளுக்குச் சேமித்து வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது மலேசிய புள்ளிவிவரத்துறை மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)