புத்ராஜெயா, 16 ஏப்ரல் (பெர்னாமா) -- இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் தங்களின் சமூக ஊடக கணக்குகளை அணுகுவதில் அரசாங்க கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் என தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறியுள்ளார்.
தற்போது அதன் செயல்முறை இறுதிக்கட்ட மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு, இவ்வாண்டு ஜூன் மாதம் இறுதியில் அந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"எம்.சி.எம்.சி தற்போது ஒழுங்குமுறை சோதனையை மேற்கொண்டு வருகிறது. தள வழங்குநர்களால் தற்போது செயல்படுத்தப்படும் வழிமுறைகளைக் கண்டறிய சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துதல்," என்றார் அவர்.
கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடக தளங்களுடன் எம்.சி.எம்.சி பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறினார்.
மேலும், மதிப்பாய்வு செயல்முறையின் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் தமது கவனத்திற்குக் கொண்டு வரப்படும் நிலையில், அது இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றார் அவர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]