ஜோகூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று பிற்பகல் கோத்தா திங்கியில் உள்ள ஒரு உணவகத்தில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர்.
பிற்பகல் மணி சுமார் 1.30 அளவில் நடத்த இச்சம்பவத்தில், 37 முதல் 63 வயதுக்குட்பட்ட இரண்டு உள்நாட்டு ஆடவர்களும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் சம்பந்தப்பட்டிருந்ததாக ஜோகூர் போலீஸ் தலைவர், சிபி டத்தோ அப்துல் ரஹ்மான் அர்ஷாட் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.
போலீசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பிற்பகல் மணி 2க்கு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் 71 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதோடு, இச்சம்பவத்தில் பயன்படுத்தியதாக நம்பப்படும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொலை வழக்கு என்பதால், இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)