Ad Banner
 விளையாட்டு

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் குணசீலன் ராஜூ

22/04/2026 06:31 PM

கோலாலம்பூர், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசிய rally கார் பந்தய வீரர் குணசீலன் ராஜூ, 15 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துலக அரங்கில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

சீனாவின் குன்மிங் நகரில் ஏப்ரல் 20 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் 2026 Rali Mile Auto போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஒரு நிலையான பந்தய வீரராக நற்பெயரை உருவாக்கியிருந்த குணசீலன் ராஜூ, 2011-க்குப் பிறகு மீண்டும் இப்போட்டியில் பங்கேற்கிறார்.

தனது ஆரம்பகாலப் பந்தய வாழ்க்கை முழுவதும் “Mr Consistent” என்று பெயர் பெற்றிருந்த குணசீலன், அனைத்துலகக் களத்திற்குத் திரும்பும் இந்த வாய்ப்பு தனக்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

இந்த வெற்றியாளர் போட்டியில், 20-க்கும் மேற்பட்ட அனைத்துலக வீரர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒன்றிணைவார்கள் என்றும், அவர்கள் யுனான் மாகாணத்தில் உள்ள சவாலான பாதைகளை எதிர்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுன்னானில் உள்ள சவாலான போட்டிக்குத் தயாராகும் நிலையில், குணசீலன் மீண்டும் விளையாட்டுக் களத்திற்குத் திரும்புவது குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்.

போட்டியைத் தவிர, 2026 மலேசியாவிற்கு வருகைப் புரியும் ஆண்டில், அனைத்துலக அரங்கில் நாட்டை முன்னிறுத்தும் முயற்சிகளுக்கு இணங்கவும் அவரின் பங்கேற்பு அமைந்துள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)