Ad Banner
 பொது

PADU-வின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டுள்ளன

20/04/2026 03:22 PM

புத்ராஜெயா, 20 ஏப்ரல் (பெர்னாமா) --  கொள்கை அமலாக்கம் மற்றும் அரசாங்க சேவையின் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசாங்கம் முதன்மை தரவுத் தளமான PADU-வின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டுள்ளன.

மக்களின் கருத்துகளைச் சேகரிப்பதற்கான ஒரு தளமாக மட்டுமின்றி ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்க சேவையை வழங்குவதற்கான ஒரு பிரதான அமைப்பாகவும் PADU செயல்படுவதாக, பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் கூறினார்.

ஆழமான மதிப்பீடுகளைச் செய்வதற்காக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கான தரவுப் பகுப்பாய்வு சேவையையும் PADU வழங்குவதாக, அக்மால் நஸ்ருல்லா கூறினார்.

"ஏனென்றால் பகுப்பாய்வு இல்லாமல் தரவை மட்டும் நம்பியிருப்பது கூட, சில நேரங்களில் கருத்துகளை முன்வைப்பதற்கோ அல்லது புரிதலை உருவாக்குவதற்கோ புள்ளியியல் அல்லது அத்தரவைப் பயன்படுத்துபவர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகின்றது. ஆகவே, இது, நாங்கள் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு சேவையாகும். இது அவர்கள் பெறும் தகவல்களைச் சரிபார்ப்பதற்கு மட்டுமல்லாமல் அந்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்யவும் முடிவுகளை எடுக்கவும் அவர்களுக்கு உதவும்'', என்றார் அவர்.

இன்று நடைபெற்ற பொருளாதார அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்மால் நஸ்ருல்லா  அதனைத் தெரிவித்தார்.

அதோடு, கொள்கை முடிவுகள் மூலத் தரவுகளை மட்டுமே சார்ந்திருக்காமல், விரிவான புள்ளிவிவரப் பகுப்பாய்வின் மூலம் ஆதரிக்கப்படுவதை உறுதிச் செய்ய இந்த பகுப்பாய்வு கூறு முக்கியமானது என்றும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)