Ad Banner
 

பி.எம்.கே.எஸ் மீதான செலவு அழுத்தத்தைக் குறைக்க 3 உடனடி நடவடிக்கை

20/04/2026 05:27 PM

கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பி.எம்.கே.எஸ் மீதான செலவு அழுத்தத்தைக் குறைப்பதற்காக, அரசாங்கம் மூன்று உடனடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கையில், வணிக நிதி உத்தரவாத நிறுவனம் எஸ்.ஜே.பி.பி மூலம் 500 கோடி ரிங்கிட் நிதியுதவி உத்தரவாத ஏற்பாடு, மின்னணு விலைப்பட்டியல்களைச் செயல்படுத்துவதில் தளர்வு மற்றும் பாதிக்கப்பட்ட மலேசியத் தயாரிப்புப் பொருட்களை மறு இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி வரிகளிலிருந்து தற்காலிக விலக்கு ஆகியவை அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  எடுத்துரைத்தார்.

பாதிக்கப்பட்ட துறைகளுக்கு இலக்கு வைத்து உதவிகளை வழங்கவும், கள நிலை சவால்களை நேரடியாக அறியவும் PMKS உடனான கலந்தாலோசிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் உலகளாவிய அழுத்தங்களை எதிர்கொள்ள, தேவையுள்ளவர்களுக்கு உதவி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தொழில்துறையினரின் நேரடி கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மடானி அரசாங்கம் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேற்காசிய மோதல்கள், எரிசக்தி விநியோக இடையூறுகள், உயர்ந்த வாகன மற்றும் காப்புறுதி செலவுகள் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் அதிகரிக்கும் அழுத்தம் காரணமாக உலகப் பொருளாதாரம் பரவலான தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எஸ்.ஜே.பி.பி திட்டத்தின் கீழ், கட்டுமானம், விவசாயம், உணவு சார்ந்த விவசாயத் துறை, தளவாடம் மற்றும் போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 80 விழுக்காடு வரை நிதியுதவியும், 10 ஆண்டுகள் வரை உத்தரவாதக் காலமும் வழங்கப்படும். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]