Ad Banner
 உலகம்

விருதுநகர் பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

20/04/2026 05:56 PM

விருதுநகர் , ஏப்ரல் 20 (பெர்னாமா) -- இந்தியா, தமிழ்நாட்டில் விருதுநகரில் உள்ள ஒரு வனஜா பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் மேலும் அறுவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இச்சம்பவத்தில், சிலர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

வெடிவிபத்து ஏற்பட்டபோது அத்தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மீட்புப் பணிகள் இன்று மாலை வரை தொடரப்பட்ட வேளையில், மீட்பு பணியின்போது மீண்டும் வெடிப்பு ஏற்பட்டது.

இதனால், தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார் 13 பேர் காயத்திற்கு ஆளாகினர்.

வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத வேளையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)