சபா, 23 ஏப்ரல் (பெர்னாமா) -- சண்டாக்கான், கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 300 ரிங்கிட் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அம்மாணவர்களின் பள்ளித் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக, இந்தத் தொகை நேரடியாகப் பள்ளிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
பள்ளி நிர்வாகம் அந்த உதவித் தொகையை மாணவர்களுக்கு நேரடியாக வழங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த உதவி, மாணவர்கள் தங்களின் பள்ளி உபகரணங்கள் மற்றும் கல்வி தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிச் சீருடை அணிவதிலும் தளர்வு அளிக்கப்படுகிறது.
நேற்று சபாவிற்கு வருகை தந்திருந்த, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீயில் பாதிக்கப்பட்ட 12 பள்ளிகளைச் சேர்ந்த 454 மாணவர்களுக்கு 300 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)