Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

நெகிரி செம்பிலான் மாநில நிர்வாகம் வழக்கம் போல் தொடரும் - அமினுடின் 

29/04/2026 05:20 PM

சிரம்பான், ஏப்ரல் 29 (பெர்னாமா) -- சட்டத்திற்கும் மாநில அரசியலமைப்பிற்கும் ஏற்ப எந்த முடிவும் எடுக்கப்படாத வரையில் தம் தலைமையிலான அரசாங்கம் தற்போது சிறுபான்மை நிலையில் இருந்தாலும் மாநில நிர்வாகம் வழக்கம் போல் தொடரும் என்று நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

மக்கள் நலன் மற்றும் மாநில நிர்வாகம் தொடரப்படுவதில் கவனம் செலுத்தி,  ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்றும் தொடர வேண்டும் என்று நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாஃவிர் உத்தரவிட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

"இதை ஆட்சியாளர் அதிகாரத்திற்கே விட்டுவிடுகிறேன். இதுதான் தற்போதுள்ள அரசாங்கம் என்று சொல்வதற்கான நேரம் வரும்போது, ​​அதுவரையில் அப்படியே தொடரலாம். ஆனால், தகுந்த ஒரு முடிவு கிடைக்கும் வரை, தகுந்த நேரம் வரும் வரை தொடருமாறு பிரதமர் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார்," என்றார் அவர்.

இந்த நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை மாநில அரசாங்கம் விரும்பவில்லை என்றும் மாறாக, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் சுமையாக இருக்கும் பொருளாதார சவால்களை நாடு எதிர்கொள்வதால் நிர்வாகம் வழக்கம் போல் தொடர வேண்டியுள்ளது என்றும் டத்தோ ஶ்ரீ அமினுடின் விளக்கினார்.

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் அமினுடின் தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை மீட்டுக் கொண்டதால், அம்மாநில நிர்வாகத்தில் நெருக்கடி ஏற்பட்டதோடு, ஆட்சிக்குழுவில் நான்கு இடங்களும் காலியாகின.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)