Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

பேராக்கில் வழிபாட்டுத் தலங்களை அரசாங்க பதிவேட்டில் இடம் பெற நடவடிக்கை

26/06/2026 08:29 PM

சுங்கை சிப்புட், ஜூன் 26 (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் அரசாங்க பதிவேட்டில், பதிவிடப்படாமல் இருக்கும் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் எதிர்காலத்தில் சட்டம் மற்றும் நிர்வாகச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.

இதற்கு தீர்வுக் காணும் வகையில், மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து, வழிபாட்டுத் தலங்களின் பதிவு செயல்முறையை எளிமைப்படுத்தும் பரிந்துரை முன்வைக்கப்பட்ட நிலையில், மாநில அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

''முஸ்லிம் அல்லாத , இந்து , கிறிஸ்துவ மற்றும் சீன சமுகங்களின் வழிகாட்டு தலங்கள் அதாவது 80 விழுக்காட்டினர் இந்தப் பதிவுகளைச் செய்வதில்லை,'' என்றார் அவர்.

இதன் மூலம் பதிவு செய்யப்படாத இந்து , கிறிஸ்துவ மற்றும் சீனர்களின் வழிகாட்டு தலங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று சிவநேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று சுங்கை சிப்புட்டில் உள்ள எங்கோர் காரை ஸ்ரீ மகா நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்டப பின்னர், மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆலய கும்பாபிஷேகத்திற்கு மாநில அரசாங்கம் மொத்தம் 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கியுள்ள நிலையில், வீடமைப்பு ஊராட்சி அமைச்சிடம் இருந்து 86 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்பகுதியில் தற்பொழுது இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், முன்னாள் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆலயத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்த ஆலயத்திற்குத் தேவையான உதவிகளை மாநில அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)