Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பூர்வக் குடியினருக்காக மருத்துவ பொது சேவைத் திட்டம்

28/06/2026 08:45 PM

போர்ட் கிள்ளான், ஜூன் 28 (பெர்னாமா) -- பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரச மலேசிய ஆகாயப்படை தி.யூ.டி.எம், விமான மருத்துவ கழகம் IPP மூலம், CIMIC எனப்படும் பொது இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

அதில் ஒரு பகுதியாக, சனிக்கிழமை, போர்ட் கிள்ளான் பகுதியில் அமைந்துள்ள பூலாவ் இண்டா இடைநிலைப்பள்ளியில் மருத்துவ பொது சேவைத் திட்டம் MEDCAP மற்றும் பல் மருத்துவ பொது சேவைத் திட்டம் DENCAP ஆகிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிள்ளான் மாவட்ட பூர்வக்குடி மேம்பாட்டுத் துறை JAKOA, கிள்ளான் மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் பூலாங் இண்டா தேசிய இடைநிலைப்பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக, தி.யூ.டி.எம்  விமான மருத்துவ கழகத்தின் விமான மருத்துவப் பிரிவுத் தலைவர் கர்னல் டாக்டர் முஹமட் இஸ்வான் ஹுசைன் தெரிவித்தார்.

"வரும் ஜூலை மாதம் தைப்பிங்கில் தேசிய நிலையில் நடைபெறவிருக்கும் செந்தமிழ் விழாவிற்கு மத்திய அரசாங்கம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் வழங்கியுள்ள நிலையில் 50 ஆயிரம் ரிங்கிட் பேரா மாநில அரசு வழங்கியுள்ளது,'' என்றார் அவர்.

சுங்கை பினாங்கு பூர்வக்குடி கிராம மக்களை மற்றும் பள்ளி ஊழியர்களைக் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ சேவைத் திட்ட மிகவும் சரியான நேரத்தில் கிடைத்த உதவி என இதில் கலந்து கொண்ட சிலர் பகிர்ந்து கொண்டனர்.

"இது சிறப்பான திட்டம். ஏனென்றால், இங்குள்ள பூர்வக் குடி மக்கள் மருத்துவமனைக்கோ அல்லது சிகிச்சையகத்திற்கோ அரிதாகவே செல்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதை எங்களிடமே தெரிவிக்கிறார்கள்,'' என்றனர்.

தி.யூ.டி.எம்-இன் விமான மருத்துவ கழகத்தைச் சார்ந்த சார்ந்த 60 அதிகாரிகளும் பணியாளர்களும், கிள்ளான் மாவட்டக் கல்வி இலாகா மற்றும் JAKOA அதிகாரிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)