Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

இன்று ஜோகூர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்; காலை 9 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் திறப்பு

27/06/2026 05:33 PM

ஜோகூர் பாரு, 27 ஜூலை (பெர்னாமா) -- 16-வது ஜோகூர் மாநிலத்திற்கான தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெறும் வேட்புமனு தாக்கலுக்காக காலை 9 மணிக்கே 56 வேட்புமனு தாக்கல் மையங்கள் திறக்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிடவிருக்கும் மாநிலத்தின் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர்களுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளிடம் வேட்பாளர் பாரத்தைச் சமர்ப்பிக்க காலை 10 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த மாநிலத் தேர்தலை முன்னிட்டு, 14 நாட்களுக்கு பிரச்சாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் தொடங்கி, ஜூலை 10ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு நிறைவடையும்.

இத்தேர்தலுக்காக, நேற்று வரை மொத்தம் 593 வேட்புமனு பாரங்கள் விற்பனையாகி உள்ளன.

இருப்பினும், இதுவரை 133 பேர் மட்டுமே வைப்பு தொகையைச் செலுத்தி, தங்களது வேட்புமனு தாக்கலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், ஜோகூர் சட்டமன்றம் ஜூன் முதலாம் தேதி கலைக்கப்பட்டது.

அதற்கான முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் 2,727,926 வாக்காளார்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)