Ad Banner
 பொது

புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கோரிய இந்திரா காந்தியின் விண்ணப்பம், தள்ளுபடி

கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- தமது மகளைக் கடத்திய முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக, தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் மேலும் மூவருக்கு எதிராக பாலர் பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தி தொடர்ந்த வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கோரிய அவரின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

புதிய ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான தனது அதிகாரத்தைப் பயன்படுத்த நீதிமன்றத்திற்கு அனுமதிக்கும் எந்தச் சூழ்நிலைகளையும் அந்த மனு வெளிப்படுத்தவில்லை என்பதைக் கண்டறிந்து, டத்தோ முஹமட் சைனி மஸ்லான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஏகமனதாக அம்முடிவை தெரிவித்தது.

[ read more ]
11h ago
 MORE NEWS
 பரிந்துரை