பொது

காட்டுத் தீ ஏற்படும் சாத்தியம் உள்ள ஐந்து மாநிலங்களை, தீயணைப்பு துறை அடையாளம்

27/02/2024 07:43 PM

கோத்தா பாரு, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டில் ஐந்து மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட 2 லட்சத்து ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில், திறந்த வெளி எரியூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, JBPM அடையாளம் கண்டுள்ளது.

சிலாங்கூர், ஜோகூர், சரவாக், பஹாங்-கில் ரொம்பின், பெக்கான், குவாந்தான் மற்றும் சபாவில் சிபித்தாங், பியூஃபோர்ட் ஆகிய மாநிலங்களில், காய்ந்த நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக JBPM தலைமை இயக்குநர், டத்தோ நோர் ஹிசாம் முஹமட் தெரிவித்தார்.

காட்டுத் தீ ஏற்பட்டால், அதனை கையாள, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை JPS, சுற்றுச்சூழல் துறை, JAS, கனிமம் மற்றும் புவி அறிவியல் துறை ஆகியவற்றுடன் JBPM, ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நீர் மட்டத்தை பராமரிக்க மாவட்ட அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் விவசாயத் தோட்டங்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அவரது தோட்டம் எரிந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது. ஆனால், வழக்கமாக நடுவில் காய்ந்த நிலப்பரப்பு உள்ளது. அங்கு பள்ளம் உள்ளது. அதிலுள்ள நீர்மட்டத்தை 30-60 சென்டிமீட்டருக்குள் வைத்திருக்க வேண்டும், அதாவது 2 அடிக்குள் இருக்க வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், எல்லையில் எரியூட்டும் நடவடிக்கைகள் இருந்தால், வாய்ப்பு இருக்கிறது,'' என்றார் அவர்.

இன்று, கோத்தா பாருவில், கிளந்தான மாநில JBPM-இம் 30 ஆண்டுகால சிறந்த சேவைக்கான விருது நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நோர் ஹிசாம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)