தாய்லாந்து, ஜனவரி 21 (பெர்னாமா) -- 2025 தாய்லாந்து பாரா ஆசியான் போட்டி அதிகாரப்பூர்வமாக நக்கோன் ராட்சசிமா-வில் தொடக்கம் கண்டிருக்கும் வேளையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நகரம் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
கலை கலாச்சார அம்சங்களோடும் இசை நிகழ்ச்சிகளின் தொகுப்புகளோடும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் வருகையால் நேற்று நடைபெற்ற தொடக்க விழா வரலாற்று தருணமாக மாறியது.
His Majesty the King’s 80th Birthday Anniversary விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்கவர் படைப்பும் வாணவெடி காட்சிகளும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
போட்டியின் அதிகாரப்பூர்வச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து புரூணை, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தீமோர்-லெஸ்டே மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் அணிவகுப்பும் தொடர்ந்து இடம்பெற்றது.
மலேசிய குழுவிற்கு முஹமட் ஸர்ராவி ரவி அப்துல்லா தலைமையேற்ற வேளையில் தேசிய பூப்பந்து வீராங்கனை நூர்சம்மீசாதுல் சியாஃபிக்கா முஹமட் சாம்பேரி நாட்டின் ஜாலூர் ஜெமிலாங்கை ஏந்தி வந்தார்.
வரும் ஜனவரி 26ஆம் தேதி வரை பாரா ஆசியான் போட்டி நடைபெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)