பொது

தவறான தகவல்களைக் கொண்ட மொத்தம் 6,168 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன

27/02/2024 07:45 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரையில் தவறான தகவல்களைக் கொண்ட மொத்தம் 6,168 உள்ளடக்கங்கள் சமூக ஊடக தள உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.

அதோடு, 2022-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி, மதம், இனம் மற்றும் அரசக் குடும்பங்கள் தொடர்பான 861 பொய்யான செய்திகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

"அந்த எண்ணிக்கையில், 91 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 60 விசாரணை அறிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. எஞ்சிய 31 அறிக்கைகள், பிடிஆர்எம், ஏஜிசி மற்றும் எம்சிஎம்சி விசாரணையில் உள்ளன,'' என்று அவர் கூறினார்.

அரச மலேசிய போலீஸ் படை, தேசிய சட்டத்துறை, தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், உள்ளிட்ட போலி செய்திகளைக் களைவதற்கான செயற்குழு கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கப்பட்டதால் அந்த முயற்சி வெற்றி பெற்றதாகவும் தியோ நீ சிங் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)