உலகம்

நைரோபியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

03/07/2024 07:52 PM

நைரோபி, 03 ஜூலை (பெர்னாமா) -- நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

மசோதாவை எதிர்த்து தொடங்கப்பட்ட ஆர்பாட்டம், தற்போது அந்நாட்டு அதிபரை பதவி விலக வேண்டும் என்று நெருக்குதல் அளித்து வருகிறது.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Mombasa-வுக்கு செல்லும் வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இதுவரை சுமார் 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்தது.

கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு சம்பவங்களுக்கு அதிபர் பொருப்பேற்க வேண்டும் என்று கென்யாவின் முக்கிய பிரதான எதிர்க்கட்சி கூறிவருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502