பொது

டெலிகிராம் மூலம் போதைப் பொருள் விநியோகிப்பு; 3 உள்நாடு இளைஞர்கள் கைது

05/07/2024 07:18 PM

செந்தூல், 5 ஜூலை (பெர்னாமா) -- டெலிகிராம் செயலி வழி போதைப் பொருளை விநியோகிக்கும் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், பாலிய நண்பர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

கோலாலம்பூரை சுற்றி மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், 20-இல் இருந்து 24 வயதிற்குட்பட்ட அந்த மூன்று உள்நாட்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ முஹமட் சஹாரி தெரிவித்தார்.

தங்கள் வாடிக்கையாளர்களை நேரில் சென்று சந்திக்காமல் பொருள் அனுப்பும் சேவையின் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவர்கள் போதைப் பொருளை விநியோகித்து வந்ததாக அவர் விவரித்தார்.

ஜாலான் ராஜா சூலானில் உள்ள வீடொன்றில் 380 கட்டிகளிலான 23 கிலோகிராம் கஞ்சா வகைப் போதைப் பொருளை தமது தரப்பு கைப்பற்றியதாக அஹ்மாட் சுகார்னோ கூறினார்.

1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)