அரசியல்

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்; வயது மூத்தவர்களுக்கு நிகராக இளைஞர்களும் அதிகளவில் வாக்களித்தனர்

06/07/2024 06:02 PM

நிபோங் திபால், 06 ஜூலை (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்களிப்பின்போது அனைத்து வயதிலான வாக்காளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

காலை 11 மணிக்கு அங்குள்ள மூன்று வாக்களிப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்ணோட்டத்தில் வயது மூத்தவர்களுக்கு நிகராக இளைஞர்களும் அதிகளவில் வந்து வாக்களிப்பதைக் காண முடிந்ததாக தேர்தல் ஆணையம், எஸ்பிஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார். 

"நிலைமை சீராக உள்ளது. ஒரு சில வாக்களிப்பு மையங்களில் நாங்கள் பார்வையிட்ட போது வயது மூத்தவர்களைக் காட்டிலும் இளைஞர்களே அதிகளவில் வாக்களிக்க வந்திருக்கின்றனர். அதன் பொருட்டு இன்று காலை அதிகமான இளைஞர்கள் வாக்களிக்க வெளியேறியிருப்பது தெரிய வருகிறது,'' என்றார் அவர்.

இன்று காலை முதல் அங்கு வானிலை நிலவரமும் சீராக இருப்பதால், அதிகமானோர் வாக்களிக்க வெளியேறியதாகவும் அவர் கூறினார்.

நிபோங் திபால் சுங்கை டுரி ஆரம்பப்பள்ளியின் வாக்களிப்பு நடவடிக்கையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் 39,279 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)