விளையாட்டு

சிறப்புமிக்க ஒரு தருணத்தை உருவாக்க நெதர்லாந்து இலக்கு

08/07/2024 05:41 PM

நெதர்லாந்து, 08 ஜூலை (பெர்னாமா) -- 2024 யூரோ கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு நெதர்லாந்து வெற்றிகரமாக தேர்வாகி உள்ளது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து வரலாற்றில் சிறப்புமிக்க ஒரு தருணத்தை உருவாக்க அவ்வணி இலக்கு கொண்டுள்ளது. 

நேற்று  துருக்கியுடன் களம் கண்ட நெதர்லாந்து 2-1 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.

முதல் பாதியை ஆக்கிரமித்து துருக்கி முதல் கோலை அடித்தாலும் இரண்டாம் பாதியில் சொந்த கோல் அடித்ததன் மூலம் அது தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை நழுவவிட்டது.

அதனைத் தொடர்ந்து, வெற்றிக்கான இலக்கோடு நெதர்லாந்தின் பயணம் போட்டியில் தொடர்கிறது. 

1988ஆம் ஆண்டு ஜெர்மனி மண்ணில் நெதர்லாந்து, வெற்றியாளராக உருவெடுத்தது. 

அப்படியொரு மதிப்புமிக்க தருணத்தை மீண்டும் அடையும் நிலையை தமது அணி தற்போது உவாக்கி உள்ளதாக  அதன் பயிற்றுநர் ரோனல்ஸ் கியோமன்  நம்புகின்றார். 

இறுதிப் போட்டியில் எந்த நாட்டைச் சந்திக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஸ்பெயினுக்கு எதிராக மோதவிருப்பதாக அவர் பதில் அளித்துள்ளார். 

ஆயினும், இந்த முறை அவரது அணி அரையிறுதிக்கு உறுதியான பயணத்தைக் கொண்டிருக்கவில்லை. 

நான்கு நாடுகள் குழு பிரிவில் மூன்றாவது இடத்துக்கு மட்டுமே நெதர்லாந்து முன்னேறியது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)