பொது

அன்வாரைச் சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

09/07/2024 07:51 PM

கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- உள்நாட்டு கலைஞர்கள், இசையமைப்பாளர் ரஹ்மான் போன்ற கலைஞர்களுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான வாய்ப்பை, ஜூலை 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சி ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று காலை நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அலுவலகத்தில் ஏ.ஆர் ரஹ்மான் அவரைச் சந்தித்தார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனும் அத்தகவல்களை தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

40 நிமிடம் நடைபெற்ற இச்சந்திப்பில், ​​ஏ.ஆர்.ரஹ்மான் தமது இசைத்துறை அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

மனிதநேயம் மற்றும் இசைத்துறையில் செயற்கை நுண்ணறிவு AI இன் பங்களிப்பு அதிகரித்து வருவது போன்றவைக் குறித்தும் ரஹ்மான தங்களுடன் அலவளாவியதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 27ஆம் தேதி கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கும் தமது இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

இசையின் மூலமான ரஹ்மானின் மனிதநேய குணம், கலை மற்றும் அமைதி ஆகியவைப் பிரதமரைப் பெரிதும் கவர்ந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502