பொது

இஷா: விசாரணை ஆவணங்கள் அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் நாளை ஒப்படைக்கப்படும்

14/07/2024 06:25 PM

கோலாலம்பூர், 14 ஜூலை (பெர்னாமா) -- அண்மையில் தற்கொலை செய்து கொண்ட இஷா என்று அழைக்கப்படும் ஏ.ராஜேஸ்வரிக்கு, டிக்டோக் செயலியின் மூலம் மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் நாளை அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு இதுவரை 11 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஹ்மட் சுகார்னோ முஹமட் சஹாரி தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் தடுப்பு காவல் நாளை தொடங்கி ஜூலை 16-ஆம் தேதி வரை இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், முதியோர் இல்லத்தில் பணிப் புரியும் உள்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரின் ஐந்து நாள்கள் தடுப்பு காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் அப்பெண் தடுத்து வைக்கப்பட்டதாக அஹ்மட் சுகார் னோ தெரிவித்தார்.

டிக்டோக் செயலியில், அவ்விருவரும் எஷா மீது கடுமையாக வார்த்தைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதாக நம்பப்படுகிறது.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 506 மற்றும் 1998-ஆம் ஆண்டு பல்லூடக தொடர்பு சட்டம் செக்‌ஷன் 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)