உலகம்

உத்திரப் பிரதேசத்தில், ரயில் தடம் புரண்டதில் நால்வர் பலி

18/07/2024 07:51 PM

லக்னோ, 18 ஜூலை (பெர்னாமா) -- உத்திரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பயணிகள் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்ட விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்ததோடு, எழுவர் காயமடைந்தனர்.

சண்டிகரில் இருந்து அசாமின் திப்ருகார்க் நகருக்கு சென்ற விரைவு ரயிலின் 4 பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள்,  கோண்டா மாவட்டத்தில், பிகவுரா என்ற இடத்தில் தடம் புரண்டது. 

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

அவ்விபத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து முழுவதும் தடைபட்டுள்ளது.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத்,  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)