பொது

ஹுத்தி அமைப்புகளை குறித்து வைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேலிய ராணுவம் அறிவிப்பு 

21/07/2024 04:21 PM

ஹுத்தி, 21 ஜூலை (பெர்னாமா) -- TEL AVIV-இல் ஹுத்தி அமைப்பு நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு ஏமனில்  உள்ள பல ஹுத்தி அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

மேற்கு துறைமுக நகரான HODEIDAH-இல், இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதோடு 87 பேர் காயத்திற்கு ஆளாகினர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு ஏமன் மீது இஸ்ரேல் மேற்கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.

Hodeidah-இல் சில ராணுவத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட நூற்றுக் கணக்கான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இத்தாக்குதல் அமைந்துள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, ஏமனில் உள்ள Hodeidah துறைமுகத்தில் IAF விமானம் நடத்திய தாக்குதலை அந்நாட்டு பிரதமர், IDF பொது ஊழியர்களின் தலைவர் விமானப்படைத் தளபதி ஆகியோருடன் தாம் கண்காணித்து வருவதாக இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் Yoav Gallant தெரிவித்தார்.

ஏமன் மற்றும் விமானப்படை நடவடிக்கை மையத்தின் மீது, தாக்குதல் மேற்கொள்ளத் தயாராகி வருவதாக சனிக்கிழமை இஸ்ரேலிய ராணுவப்படை காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.

எனினும், ஏமனின் எத்தனை தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பதை வெளியிடாத இஸ்ரேலியத் தரப்பு அப்பகுதி ஈரானிய ஆயுதங்கள் கொண்டுவரப்படும் முக்கிய துறைமுகமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், ஏமனின் ஹுத்தி அமைப்பு இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காணொளியை வெளியிட்டுள்ளது.

ஏமனின் எரிபொருள் சேமிப்பு கிடங்கு மற்றும் மின்நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் வெளிப்படையான ஆக்கிரமைப்பை மேற்கொண்டு வருவதாக ஹுத்தி பேச்சாளர் முஹமட் அப்துல் சலாம் தமது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் துன்பத்தை அதிகரிப்பது, காசாவை ஆதரிப்பதை நிறுத்துவதற்கு ஏமனிற்கு நெருக்கடி அளிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)