பொது

வலுப்படுத்தப்பட்ட உலகளாவிய தெற்கைத் தவிர்க்க முடியாது - மலேசியா நம்பிக்கை

21/08/2024 05:16 PM

புது டெல்லி, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வலுப்படுத்தப்பட்ட உலகளாவிய தெற்கு தவிர்க்க முடியாது ஒன்றாகும் என்றும், பல்வேறு நாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் மலேசியா நம்புகிறது.

மேலும், அவர்கள் நடப்பில் இருக்கும் வேற்றுமையையும் பன்முகத்தன்மையையும் ஏற்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உலகளாவிய தெற்கின் எழுச்சியும் அனைத்துலக அளவில் அதன் மிகப்பெரிய பங்களிப்பிற்கான ஆர்வம் அதிகரித்து வருவதும் வட்டார அதிகாரத்தை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''என் கருத்துப்படி வலுப்படுத்தப்பட்ட உலகளாவிய தெற்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். கூட்டு பேச்சு வார்த்தையின் வழி, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி உலக சவால்களைக் கையாள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்த தற்போது உண்மையான வாய்ப்புகள் உள்ளன. அது நிச்சயம், பருவநிலை மாற்றம், விநியோகச் சங்கிலி பின்னடைவு, உணவு உத்தரவாதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிர்வகிப்பு போன்ற நாம் ஒன்றிணைந்து தீர்வைத் தேடிவரும் நெருக்கடியான பிரச்சனைகளையும் உள்ளடக்கியுள்ளது,'' என்றார் அவர்.

எதிர்மறையான சில கருத்துக்கள் இருந்தாலும், உலகளாவிய தெற்கு இயக்கம் உலகளாவிய வடக்கைப் புறகணிக்கும் நோக்கத்திலானது அல்ல என்றும் அன்வார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)