பொது

ஜோகூர், சபா, சரவாக்கில் தொடர் மழை பெய்யும்; மெட்மலேசியா எச்சரிக்கை

19/12/2024 06:25 PM

கோலாலம்பூர், 19 டிசம்பர் (பெர்னாமா) -- ஜொகூர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரையிலும், சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 20ஆம் தேதி வரையில், ஜோகூரில், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா கூறியுள்ளது.

இதனிடையே, சரவாக்கில் குச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமன், பெடோங், சரிகேய், சிபு, முகா, கபிட், பிந்துலு மற்றும் மிரி ஆகிய பகுதிகளும் சபாவின், மேற்கு கடற்கரை பகுதிகளான ரனாவ், கோட்டா பெலுட், சண்டகன், டெலுபிட், கினாபடங்கன் மற்றும் பெலுரான் ஆகியவற்றில் டிசம்பர் 22ஆம் தேதி வரையில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழையால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடனும் அமலாக்கத் தரப்பினரின் உத்தரவுகளைப் பின்பற்றும்படியும் மெட்மலேசியா நினைவுறுத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)